உறவு முறிந்தது
இந்தியாவின் ஹீரோ குழுமத்துடனான உறவை ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் முறித்துக் கொண்டது. 26 ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த இந்த நிறுவனங்கள் தனித் தனியே பிரிந்தன. தன் வசம் உள்ள 26 சதவீத பங்குகளை ஹீரோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும். அதன் பின்னர் ஹீரோ நிறுவனத்துக்கு எந்தவித தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் ஹோண்டா வழங்காது எனத் தெரிகிறது.