ஐம்பெருங்குழு, எண்பேராயம்
பொது அறிவு- வரலாறு: சங்க கால ஆட்சிமுறை
* சங்க காலத்தில் மன்னராட்சி முறை பின்பற்றப்பட்டது
* வேந்தன், கோ, இறை என்று மன்னன் அழைக்கப்பட்டான்* வாரிசுரிமை பின்பற்றப்பட்டது
* தந்தைக்குப் பிறகு மகனுக்கே ஆட்சிக்கு வரும் உரிமை தரப்பட்டது
* மன்னரின் அதிகாரம் வரம்பற்றதாக விளங்கியது
* கடவுளின் பிரதிநிதியாக மன்னர் கருதப்பட்டார்
* மக்களின் நலனைக் காப்பது மன்னரது முக்கியக் கடமையாகும்
* சட்டத்தின் காவலராக மன்னர் விளங்கினார். அவையில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார்
* கரிகாலன், மனுநீதிச் சோழன், பொற்கைப் பாண்டியன் போன்றோர் நீதிவழுவாத ஆட்சி நடத்தினர்
* அரசனுக்கு உதவ ஐம்பெருங்குழு, எண்பேராயம் என இரண்டு குழுக்கள் இருந்தன. பல அலுவலர்களும் இருந்தனர்