கிரிக்கெட்- இந்தியா வெற்றி
இந்தியா- நியூசிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஸ்டைரிஸ் 24 ரன்களும், ஹவ் 23 ரன்களும், பிராங்கிளின் 17 ரன்களும் எடுத்தனர். 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 21.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் 42 ரன்களுடனும், பார்த்திவ் பட்டேல் 56 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கோக்லி 2 ரன்களிலும், கேப்டன் காம்பீர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.