கூடுதல் தேர்தல் அதிகாரிகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.ராஜேந்திரன் (பேரூராட்சிகள் துறை இயக்குநர்) மற்றும் பி.அமுதா (தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலாளர்) ஆகியோர் தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்கும் முறை குறித்து வாக்காளர்களுக்கு தெரிவிப்பது உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரியாக அமுதா செயல்படுவார். இந்த தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.