கருணாகரன் மரணம்
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான கருணாகரன்(வயது 93) இன்று காலமானார். கேரள மாநில முதலமைச்சராக 4 தடவை பதவி வகித்தவர் கருணாகரன். சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் பிரச்சனையால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.