குறையும் பெண்குழந்தைகள்
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக மாநில பெண்கள் ஆணையத்தலைவி சற்குண பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்-பெண் குழந்தைகளின் பாலின பிறப்பு விகிதத்தின்படி, பெண் சிசு கடந்த 60 ஆண்டுகளாக குறைந்து வருதாகவும், இந்த பிறப்பு விகிதம் 1000-க்கு 952 என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும், படித்தவர் மத்தியில் இது ஆயிரத்துக்கு 966-ஆகவும், கிராமங்களில் இது 939-ஆகவும் உள்ளதாகவும் அவர் கூறினார். கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.