ரயில்வே 2.27 லட்சம் வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 2 லட்சத்து 27 ஆயிரம் புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதற்கான அறிக்கை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள், அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வு எழுத ரயில்வே தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாகரில் நிருபர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.