Friday, December 3, 2010

காபி ஏற்றுமதி ஏறுமுகம்

ஆசியா கண்டத்தில் காபி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 57 சதவீதம் அதிகரித்து 2.71 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
2009-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.72 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  உலகின் மொத்த காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 4 சதவீதம் ஆகும். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70சதவீதம்ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. இந்தியாவின் காபிச் சந்தையில் இத்தாலி, ஜெர்மனி, ரஷியா ஆகியவை குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும். இந்தியாவில் தென் மாநிலங்களில்தான் அதிகளவில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் காபி பயன்பாட்டில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP