தூதரான டத்தோ சாமிவேலு
இந்தியாவுக்கான மலேசிய தூதராக டத்தோ சாமிவேலு (வயது 74) நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து வந்த டத்தோ சாமிவேலு கடந்த வாரம்தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அண்மையில் டத்தோ சாமிவேலுவின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் பேசுகையில் டத்தோ சாமிவேலுவை இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்குமான தூதராக நியமித்து இருப்பதாக அறிவித்தார்.