கொடிநாள் நோக்கம்
கொடிநாள் நேற்று (டிசம்பர் 7) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் கொடிநாள் கொண்டாடப்படுகிறது.கொடிநாளில் வசூலிக்கப்படும் நிதி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலவாழ்வு திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ராணுவ வீரர்களின் விதவைகளுக்கும், உடலுறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்கும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பங்களுக்காகவும் இந்தத் தொகை செலவு செய்யப்படுகிறது.