Friday, December 3, 2010

பிரமோஸ் சோதனை வெற்றி

இந்தியா- ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஒரிசாவின் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. கடந்த 2001ல் முதல் முறையாக ரஷ்யாவின் உதவியுடன் பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒலியின் வேகத்தை விட, 2.8 மடங்கு அதிவேகமாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
9மீட்டர் நீளமுள்ள பிரமோஸ் ஏவுகணை 300 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து கொண்டு 290 கி.மீ., வரை பாய்ந்து சென்று இலக்கினை தாக்கும் சக்தி கொண்டது. நிலம், நீர், ஆகாய மார்க்கங்களிலிருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவலாம்.
பிரமோஸ் பெயர்க்காரணம்:
BRAHMOSBrahmaputra (India) and the Moskva (Russia)
இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷியாவின் மாஸ்க்வா ஆகிய நதிகளின் பெயர்களின் ஆங்கில எழுத்துக்களில் முதல் பாதிகளை சேர்த்து பிரமோஸ் என்றழைக்கப்படுகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP