Thursday, December 2, 2010

கொழும்புக்கு பயணி கப்பல்

தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல்களை இயக்குவது என கப்பல் போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதலில் தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். பின்னர் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யும்படி தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையே 152 கி.மீ. கடல் மைல் தூரத்தைக் கடக்க சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை ஆகும். தற்போதுள்ள விமானக் கட்டணத்தை ஒப்பிடும்போது, கப்பல் பயணத்துக்கு குறைந்த கட்டணமே இருக்கும். இது குறித்து இந்தியா, இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கப்பல் போக்குவரத்தைத் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP