ஆந்திர புதிய அமைச்சரவை
ஆந்திர மாநிலத்தில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதற்கு முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜகன்மோகனின் ஆதரவாளர்களான ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் பில்லி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தற்போதைய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
ஜகன்மோகனின் உறவினரும் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரருமான விவேகானந்த ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். மேலவையில் இருந்து இவர் ஒருவர் மட்டுமே அமைச்சராகியிருக்கிறார். அமைச்சரவையில் 11 பேர் புதுமுகங்கள். இவர்களில் 7 பேர் முதல்முறையாக அமைச்சர் பதவி வகிக்கின்றனர்.