சி.பி.ஐ. புதிய இயக்குநர்
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநர் அஷ்வினி குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய இயக்குநராக ஏ.பி.சிங் என்ற அமர் பிரதாப் சிங் (வயது 58) நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பொறுப்பினை வகிப்பார்.
ஜார்க்கண்ட் மாநில 1974-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஏ.பி.சிங். தற்போது சி.பி.ஐ.யின் 24வது இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே 1987- 1995 வரை சி.பி.ஐ.யில் பணியாற்றிய ஏ.பி.சிங், ஹர்சத் மேத்தா வழக்கு உள்பட பல்வேறு பரபரப்பான வழக்குகளில் புலனாய்வு செய்த அனுபவம் கொண்டவர்.