ஆண்டுக்கு 5லட்சம் வேலை
ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும்வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் இதை தெரிவித்த அமைச்சர், தமிழக முதல்வர் கருணாநிதி நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் அதன்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.