மீண்டும் லத்திகாசரண்
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி லத்திகா சரண். இவர் தமிழக டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு உயர் போலீஸ் அதிகாரியான நடராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தமிழக அரசு, யு.பி.எஸ்.சி.க்கு மூன்றுபேர் கொண்ட பெயர் பட்டியலை அனுப்பியது. அதில் லத்திகா சரண், ஆர். நடராஜ், கே. விஜயகுமார்
ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து லத்திகா சரண் தமிழக டி.ஜி.பி.யாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.