Saturday, November 27, 2010

20வது அணு மின்உலை

கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 4வது அணு உலை இந்தியாவின் 20-வது அணுமின் உலையாகும். இது 220 மெகாவாட் திறன் கொண்டது. இதன் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து தொழில்நுட்ப ரீதியான செயல்பாடு இன்று காலை தொடங்கியது.
இதன் மூலம், 20-க்கும் மேற்பட்ட அணுஉலைகள் கொண்ட நாடுகளின் பட்டியிலில் 6-வது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணுமூலப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இந்தியாவுக்கு அனுமதி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP