உணவுப் பணவீக்கம் 8.69%
நாட்டின் உணவுப் பணவீக்கம் 8.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏழு வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த உணவுப் பணவீக்கம் நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.69 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. வெங்காயம், பழங்கள் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.