Wednesday, December 22, 2010

தரவரிசையில் சச்சின் 2

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2-ம் இடம் பிடித்துள்ளார். 880 புள்ளிகளுடன் அவர் 2-ஆம் இடம் பிடித்திருக்கிறார். இலங்கை வீரர் குமார சங்ககரா 882 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேக்கஸ் காலிஸ் 3-வது இடத்திலும், இந்தியாவின் சேவாக் 4-வது இடத்திலும், விவிஎஸ் லஷ்மண் 15-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜாகீர்கான் 7-வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 10-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கிரீம் ஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளதாக தரவரிசைப் பட்டியல் தெரிவித்துள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP