Saturday, December 11, 2010

அக்னி-2 பிளஸ் தோல்வி

இந்தியாவின் 'அக்னி-2 பிளஸ்' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி-3 ஏவுகணை 3,500 கி.மீ. தூரம் செல்லக் கூடியது. தற்போது சோதித்து பார்க்கப்பட்ட அக்னி-2 பிளஸ் ஏவுகணை இடைப்பட்ட தூரத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-2 பிளஸ் புறப்பட்ட சில விநாடிகளிலேயே பாதையை விட்டு விலகிச் சென்று கடலில் விழுந்தது. ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP