மியான்மர் தேர்தல்
ராணுவ ஆட்சி நடந்துவரும் மியான்மரில் 20ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடந்தது.
தேசிய நாடாளுமன்றம், 14மாகாண சட்டப்பேரவைகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதில் மியான்மர் விடுதலைப்போராட்ட தலைவர் ஆங் சான் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி போட்டியிடவில்லை. ராணுவ ஆதரவு கட்சிகளான யு.எஸ்.டி.பி, என்.யு.பி, ஆங் சான் சூ கீயின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய தேசிய ஜனநாயகப் படை உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
மியான்மரில் 1962ஆம் ஆண்டுமுதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 1990ல் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை ராணுவ ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாக ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.