மாற்றுத்திறனாளிகள் பதிவு
மாற்றுத் திறனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கம்ப்யூட்டர் ஒருங்கிணைப்புத் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒரே சீரான நடைமுறை மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் கொண்டு வரப்படும். மேலும், கண்பார்வை இழந்தோர், செவித் திறன் இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர் மற்றும் உடல் உறுப்பு குன்றியோர் ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தேவையில்லை என அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.