Saturday, November 13, 2010

பத்தாம் வகுப்பு- வெளிநாடு

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP