Thursday, November 25, 2010

மீண்டும் நிதீஷ்குமார்

பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் ஆகிறார். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (115)- பாரதிய ஜனதா கட்சி (91) கூட்டணிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 22 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான லோக ஜனசக்தி 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேச்சைகள் 6 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜேஎம்எம் ஆகியவை ஓர் இடத்தையும் பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சரும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி அவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP