முதல்வரான சபாநாயகர்
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து வந்த கிரண்குமார் ரெட்டி அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த ரோசய்யா திடீரென ராஜிநாமா செய்ததை தொடர்ந்து கிரண்குமார் ரெட்டி புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
கிரண்குமார் ரெட்டிக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆஸாத், முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.