Monday, November 8, 2010

சேரன் செங்குட்டுவன்

பொது அறிவு- வரலாறு
சங்க கால தமிழ் அரசுகள்: சேர அரசு
(தற்கால கேரளப் பகுதியை உள்ளடக்கியது)
தலைநகரம்- வஞ்சி
துறைமுகம்- தொண்டி
சின்னம்- வில் அம்பு
* வானவர், வில்லவர், மலையர் என சேரருக்கு பட்டப்பெயர்கள் உண்டு
* உதியன் சேரலாதன் மரபு, இரும்பொறை மரபு என இரண்டு மரபுகள் இருந்தன
தலைசிறந்த மன்னன்- செங்குட்டுவன்
* பதிற்றுப்பத்து, அகநானூற்றில் செங்குட்டுவன் குறித்த செய்திகள் காணப்படுகின்றன
* இவனது போர் வெற்றி குறித்து சிலப்பதிகாரம் சொல்கிறது
* செங்குட்டுவன் இமயம் வரை படையெடுத்தவன்
* கங்கையைக் கடந்து சென்று எதிரிகளை வீழ்த்தியவன்.
* இமயத்தில் வில்கொடியை நாட்டி அங்கிருந்து கற்களை கொண்டுவந்து
கண்ணகிக்கு நினைவுச்சின்னம் அமைத்தான்
* செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம் இயற்றியவர்) ஆவார்
சேரர்களில் புகழ்பெற்ற பிற மன்னர்கள்- சேரலாதன், பெரும்சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை. பதிற்றுப்பத்து மற்றும் பிற சங்க இலக்கியங்களில் செய்திகள் இவர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
(தொடரும்)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP