பெருங்கல் காலம்
பொது அறிவு- வரலாறு
* பெருங்கல் என்றால் நீத்தார் நினைவுச்சின்னம் என பொருள்படும்* புதிய கற்காலத்திற்கு பிறகு வாழ்ந்த மக்கள் நீத்தார் நினைவுச்சின்னங்களை அமைத்தனர்.
* சிகப்பு, கறுப்பு நிறங்களிலான மண்தாழிக்குள் இறந்தவர்களின் உடல், அவர்கள் பயன்படுத்திய இரும்புக்கருவிகளை வைத்து புதைத்தனர்.
* பின்னர் அவற்றின் மீது பெரிய பாறைக்கல் துண்டுகளை வட்டமாக அடுக்கி வைத்தனர். இதுவே நீத்தார் நினைவுச் சின்னம் ஆகும்.
* காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நீத்தார் நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
* மற்றொரு வகை உடல்அடக்கம் மண்தாழி அடக்கம் எனப்படும்
* திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மண்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பெருங்கற்களாலான வட்டவடிவ நினைவுச் சின்னம் இல்லை. தங்கம் மற்றும் இரும்பிலான பொருட்கள் இருந்தன
* இரும்பிலான வேல், வெண்கலச் சாமான்கள், வாய்ப்பூட்டு அலகு போன்றவையும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டன.
* பண்டைத் தமிழ்க்கடவுள் முருகனை அப்பகுதி மக்கள் வழிபட்டதற்கு இந்தப் பொருட்களே சான்றாக கருதப்படுகிறது