Sunday, November 7, 2010

ஐ.டி.ஐ- துபாய் வாய்ப்பு

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: 
ஐ.டி.ஐ. கல்வித் தகுதியுடன் கேபிளிங், டக்டிங், டெர்மினேஷன் பிரிவுகளில் இரண்டு வருட அனுபவம் உள்ள எலக்ட்ரீசியன்களுக்கு துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உள்ளன.
தகுதியுள்ள மனுதாரர்கள் - தங்களுடைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் ஐந்து புகைப்படங்களை இணைத்து, எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நவம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் நவம்பர் 9-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும். வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 11,000 முதல் ரூ. 12,000 வரை தகுதிக்கேற்றவாறு மாத ஊதியம் வழங்கப்படும். விசா, விமானப் பயணச்சீட்டு, உணவு, உடை ஆகியவை வேலை அளிக்கும் நிறுவனத்தினரால் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களை அறிய 044-2446 4269, 2446 7562, 99402 76356, 99403 93617 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP