சீனாவின் மனமாற்றம்
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஓராண்டாக சீனா பாஸ்போர்ட்டில் முத்திரையிடாமல் தனித்தாளில் முத்திரையிட்டு விசா வழங்கி வந்தது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஐக்கிய பகுதியல்ல என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்த சீனாவின் இத்தகைய செயல்பாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வந்தது.இந்த நிலையில் தற்போது சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில் முத்திரையிட்ட விசாவை சீனா வழங்கியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு விசா வழங்குவதில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் பாராட்டுக்குரியது என இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.