சென்னையில் முகாம்
மத்திய சென்னை பகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேர்த்திறன் வேலை வாய்ப்பு முகாம் (Direct Talent Placement Programme) வருகிற 27-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இதில் பி.இ. பட்டதாரிகள் நீங்கலாக 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களும் ஏற்கெனவே பணியில் உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் பங்கேற்கலாம். இது இலவச முகாம். மேல் விவரங்களுக்கு 98415 88646, 98840 20527 என்ற செல்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.