Tuesday, November 23, 2010

இந்தியா: யு.எஸ்.தீர்மானம்

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கஸ் பிலிராகிஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்துள்ள அந்த தீர்மானத்தில், உலக சமாதானத்துக்காகவும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நாட்டவும் பாடுபட்டு வரும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஐ.நா.அமைதிப் படைகளில் இந்தியா தனது பங்களிப்பை நிறையவே செய்து வருகிறது. இந்தியாவுக்கு ஐ.நா. சபையில் நிரந்தர இடம் அளிக்கும் வகையில் ஐ.நா. விதிமுறைகளின் 23-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP