Thursday, November 11, 2010

ஒபாமா இந்திய வருகை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அதிபருக்கான சிறப்பு விமானமான ஏர்ஃபோர்ஸ்-1ல் மும்பை வந்திறங்கினார். இரண்டு நாட்கள் மும்பையில் தங்கியிருந்தவர், மூன்றாம் நாள் டெல்லி வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பாராளுமன்ற இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஒபாமா உரையாற்றினார்.
ஒபாமா உரையின் முக்கிய அம்சங்கள்:
- ஐ.நா.பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி அதில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க ஆதரிப்போம்
- மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும்
- இந்தியா வல்லரசாக வளர்வதை ஆதரிக்கிறோம்
- இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறுகின்றன. நீதித்துறை சிறப்பாக செயல்படுகிறது
- அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த தயாராகி விட்டோம்
- இந்தியா தனது சந்தைகளை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலீட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும்
- பூஜ்யத்தை கண்டுபிடித்து இன்றைய தகவல் புரட்சிக்கு அடித்தளம் போட்டது இந்தியாதான்
- மகாத்மா காந்தியும் அவரது போதனையும் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதி ஆகியிருக்க முடியாது. எனது உந்து சக்தி அவரே
- அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சுதந்திரத்துக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் காந்திதான் உந்துசக்தியாக திகழ்ந்தார்
* டெல்லி ராஜ்காட் காந்தி சமாதிக்கு சென்ற ஒபாமா அங்கு மலர் வளையம் வைத்து வணங்கினார். மார்ட்டின் லூதர்கிங் நினைவிடத்தில் பயன்படுத்தப்பட்ட சலவைக்கல் ஒன்றை ராஜ்காட் சமாதிக்குழு செயலரிடம் ஒபாமா வழங்கினார்.
* மும்பையில் ஒபாமா தங்கியிருந்தபோது இந்திய, அமெரிக்க நிறுவனங்களிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP