புதுச்சேரிக்கு ரூ.1000கோடி
புதுச்சேரி நகர மேம்பாட்டுக்கு கத்தார் நாட்டு தோஹா வங்கி ரூ.1000கோடி கடன் வழங்க உள்ளது. தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி சீதாராமன், புதுச்சேரி முதலமைச்சர் வி.வைத்திலிங்கத்தை புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்த பிறகு இந்த தகவலை வைத்திலிங்கம் வெளியிட்டார்.