எலும்பு அணிகலன்கள்
பொது அறிவு- வரலாறு
புதிய கற்கால மக்கள் கிளிஞ்சல்கள், எலும்புத்துண்டுகளால் ஆன அணிகலன்களை அணிந்தனர்.
* பொருட்களை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல சக்கரங்களை பயன்படுத்தினர்* சக்கரத்தை வைத்து மண்பாண்டங்களை செய்தனர்
* புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கால மண்பாண்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழி, தண்ணீர் குவளைகள், விளக்குகள் போன்றவை திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டன.
* புதிய கற்கால மக்களுக்கு நெசவுத் தொழில் தெரியும்
* பருத்தி ஆடைகள், பிற்காலத்தில் சாயம் துவைக்கப்பட்ட வண்ண ஆடைகளை அணிந்தனர்
* கழுத்தணிகள், வளையல்கள் போன்ற அணிகலன்களை அணிந்தனர். அவை கிளிஞ்சல்கள், எலும்புத்துண்டுகளால் செய்யப்பட்டவை ஆகும்.
* இறந்தவர்களின் உடலை பெரிய மண்தாழியில் வைத்து அதில் உணவு, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்தனர்.
* இறந்தவர்களை வழிபட்டனர். புதிய கற்காலத்தில் சமயச்சடங்குகளும் வளர்ந்தன.
(தொடரும்)