Monday, October 4, 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். 17 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தப் பட்சம் 6-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

உடல் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதில் பங்கேற்ற விரும்புவோர் தங்களது சுய விவரம், தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகம், ஆபிசர்ஸ் லைன், வேலூர் என்கிற முகவரிக்கு அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP