நோபல் பரிசுகள்- 2010
நோபல் பரிசு வரலாறு:
நோபல் பரிசை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல்.1833ஆம் ஆண்டில் பிறந்தார்.சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். வேதியியல், பொறியியலில் நிபுணர். டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்து நோபல் பரிசை ஏற்படுத்தினார்.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத்தொகையின் மதிப்பு தலா ரூ.6கோடியே 57லட்சம். 1901ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவுதினமான டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பிரிவுகளுக்கானவை சுவீடனிலும் வைத்து வழங்கப்படுகின்றன.