நோபல் 2010- மருத்துவம்
பெயர்: ராபர்ட் ஜி.எட்வர்ட்ஸ் (வயது 85) (இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி)
சாதனை: சோதனைக்குழாய் குழந்தைகளை உருவாக்கும் இன்விட்ரோ ஃபெர்டிலைசேஸன் (In Vitro Fertilisation) (ஐ.வி.எஃப்) என்ற சிகிச்சை முறையை மேம்படுத்தியவர்.
தற்போது பணி: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்
விரிவான தகவல்கள்:
2010ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் ஜி.எட்வர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்தியதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
1950ஆம் ஆண்டுகளுக்கு முன் கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பிறகு கருப்பைக்குள் செலுத்தும் முறை இருந்து வந்தது. இதனை ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது சக விஞ்ஞானியான பேட்ரிக் ஸ்டீப்டோ என்பவருடன் சேர்ந்து மேம்படுத்தினார். இந்த முறையானது இன்விட்ரோ ஃபெர்டிலைசேஸன் (In Vitro Fertilisation) (ஐ.வி.எஃப்) என்றழைக்கப்படுகிறது.
இந்த முறையில் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை 'லூயிஸ் பிரவுன்', இங்கிலாந்தில் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று பிறந்தது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 40லட்சம் சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்ததற்கு ராபர்ட் எட்வர்ட்ஸின் ஆராய்ச்சி முக்கியக் காரணம் என்பதால் அவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 85வயதாகும் ராபர்ட் எட்வர்ட்ஸ், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
* உலகின் இரண்டாவது சோதனைக்குழாய் குழந்தை இந்தியாவில் பிறந்தது. இதனை கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் சுபேஷ் முகோபாத்யாயா 1978ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி உருவாக்கினார். இந்தியாவில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கிய முதல் டாக்டர் என்ற பெருமைக்குரிய சுபேஷ் முகோபாத்யாயாவின் சாதனை 1986ஆம் ஆண்டுதான் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் 1981ஆம் ஆண்டில் முகோபாத்யாயா தற்கொலை செய்து கொண்டார்.
மேல் விவரங்களுக்கு:
www.nobelprize.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.