நோபல் 2010- இயற்பியல்
பெயர்:
* ஆண்ட்ரீ கெய்ம் (வயது 51) (நெதர்லாந்து நாட்டவர்)
* கான்ஸ்டான்டின் நொவோ செலேவ் (வயது 36) (இங்கிலாந்து மற்றும் ரஷிய குடியுரிமை பெற்றவர்)
(இருவரும் இயற்பியல் விஞ்ஞானிகள்)
சாதனை: அணு அளவு தடிமன் கொண்ட கிராபீன் என்ற கார்பனை உருவாக்கியுள்ளனர்
தற்போது பணி: இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்
விரிவான தகவல்கள்:
இயற்பியல் விஞ்ஞானிகளான ஆண்ட்ரீ கெய்ம், கான்ஸ்டான்டின் நொவோ செலேவ் ஆகிய இருவரும் 2010ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சாதாரண பென்சில்களில் உள்ள கிராபைட் கார்பனில் இருந்து கிராபீன் என்ற பொருளை இருவரும் உருவாக்கியதற்காகவே இந்த கவுரவம்.
இவர்கள் உருவாக்கிய தட்டை வடிவிலான கிராபீன், தாமிரத்துக்கு இணையான மின்கடத்தும் திறனுடையது. வெப்பத்தையும் எளிதில் கடத்தும் தன்மை கொண்டது. ஹீலியம் வாயு கூட ஊடுருவ முடியாத வகையில் அடர்த்தியானது. மின்னணுவியல் துறையில் கிராபீன்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
மேல் விவரங்களுக்கு:
www.nobelprize.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.