நோபல் 2010- வேதியியல்
பெயர்:
* ரிச்சர்டு ஹெக் (வயது 79) (அமெரிக்கா)
* ஐயிஷி நெகிஷி (வயது 75) (ஜப்பான்)
* அகிரா கஸூகி (வயது 80) (ஜப்பான்)
சாதனை: கார்பன் அணுக்களை பலேடியத்தை வினை ஊக்கியாகக் கொண்டு பிணைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை மூன்று பேரும் கண்டுபிடித்தனர்.
விரிவான தகவல்கள்:
கார்பன் அணுக்களை பலேடியத்தை வினை ஊக்கியாகக் கொண்டு பிணைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது கரிம வேதியியல்துறை சார்ந்த கண்டுபிடிப்பாகும்.
இது புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படும். மேலும் ஹெர்பஸ் வைரஸ் தாக்குதல், எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகள், கம்ப்யூட்டருக்கான மானிட்டர்கள் போன்றவை உருவாக்கவும் வருங்காலத்தில் பயன்படுத்தப்படலாம் என நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
மேல் விவரங்களுக்கு:
http://nobelprize.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.