நோபல் 2010- இலக்கியம்
பெயர்: மரியோ வர்கஸ் லோசா (வயது 74)
(பெரு நாட்டு எழுத்தாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர்)
சாதனை: அதிகார அமைப்புகள் குறித்து தனது எழுத்துக்களால் படம்பிடித்து காட்டி வருவது.
விரிவான தகவல்கள்:
பெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசா, 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு பெற்றுள்ளார். எழுத்தாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பல முகம் கொண்டவர் லோசா. அதிகார அமைப்புகளை கிடுகிடுக்க வைக்கும் இவரது எழுத்துக்கு மக்கள் ஆதரவு அதிகம்.
இவரது படைப்புகளில் ஏராளமானவை அரசியல் கருத்துகளையும், லத்தீன் அமெரிக்காவின் வன்முறை, கலவர வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. 1959ல் பாரீஸ் சென்ற லோசா அங்கு மொழி ஆசிரியராகவும், பத்திரிகையாளராக பிரான்ஸ் செய்தி ஏஜென்சியிலும் தேசிய தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ளார். 1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லோசா, ஆல்பர்ட்டோ பியூஜிமோரியிடம் தோற்றார். பியூஜிமோரி ஆட்சிமீது அதிருப்தி அடைந்த லோசா, 1993 மார்ச்சில் ஸ்பெயின் நாட்டவராக குடியுரிமை பெற்றார். இவரது இந்த நடவடிக்கைக்கு பெரு நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார் லோசா.
மேல் விவரங்களுக்கு:
http://nobelprize.org/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.