நோபல் 2010- அமைதி
பெயர்: லியூ ஷியோபோ (வயது 54) (சீனாவின் அறவழிப் போராளி)
சாதனை: 130 கோடி சீன மக்களின் மனித உரிமைகளுக்காக அறவழியில் பல ஆண்டுகளாக போராடி வருபவர். சீனாவில் ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக சீன அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விரிவான தகவல்கள்:
சீனாவின் ஜிலின் பகுதியில் உள்ள ஷாங்ஷனில் 1955ல் பிறந்தவர் லியூ. பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1984ல் எம்ஏ பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்து 1988ல் முனைவர் பட்டமும் பெற்றார். 1989ல் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் சிறப்பாக நடைபெற லியூ முக்கியப் பங்காற்றினார். அரசியல் மாற்றம் அமைதி வழியில் ஏற்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் லியூ.
மேல் விவரங்களுக்கு:
http://nobelprize.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.