Thursday, October 28, 2010

கிராமங்கள் உருவான விதம்

Thanks to the Author of this Art
பொது அறிவு- வரலாறு
(புதிய கற்கால மக்களின் வாழ்க்கை முறை) 
புதிய கற்கால மக்களின் கூட்டுவாழ்க்கை முறையே பிற்காலத்தில் கிராமங்கள் உருவாக வழிவகுத்தது.
* பழைய கற்காலத்தை விட மாறுபட்ட, மேம்பட்ட வாழ்க்கை முறையை புதிய கற்கால மக்கள் கொண்டிருந்தனர்
* மென்மையான படிக்கற் பாறைகளிலான கருவிகளை பயன்படுத்தினர். அவை பளபளப்பு,  கூர்மையானவையாக இருந்தன.
* ஓரிடத்தில் தங்கி வசித்தனர். கூட்டம்கூட்டமாக வாழ்க்கை நடத்தினர். கூட்டாகவே வேலை செய்தனர்.
* இந்த கூட்டு வாழ்க்கையே பிற்காலத்தில் கிராமங்கள் உருவாக வழிவகுத்தது
* குகைகளை கைவிட்டு களிமண் குடிசை, கூரைவீடுகள் அமைத்து வசிக்கத் தொடங்கினர்
* வேளாண்மையில் ஈடுபட்டனர்.
* நாய், ஆடு, மாடு, பசு, எருது போன்ற பிராணிகள் வளர்த்தனர்
* நாயை வேட்டைக்குக் பயன்படுத்தினர்
* ஆடு, மாடுகளை உணவுக்கும் சுமை இழுக்கவும் உபயோகப்படுத்தினர்
* பயிரிடுதலில் ஆர்வம் காட்டினர்.
* நீர்வளம் அதிமான ஆற்றுச் சமவெளிகளில் வாழ்ந்தனர்
* நெல், தினை, காய்கள், கனிகள் போன்றவற்றை பயிரிட்டனர்
(தொடரும்)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP