Wednesday, October 27, 2010

வண்டலூர் பூங்கா வழிகாட்டி

சென்னையை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் வழிகாட்டியாகப் பணிபுரிய தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: 
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 17 லட்சம் பேர் வருகின்றனர்.
வன உயிரினம் மற்றும் இயற்கை குறித்த முக்கியத்துவத்தை இங்கு வரும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையில் உயிரியல் பூங்கா வழிகாட்டிகள் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தாவரவியல், விலங்கியல், வனவாழ் உயிரியல் மற்றும் வனவியலில் இளநிலைப் பட்டம் பெற்று இளமைத் துடிப்பும், ஆர்வமும் உள்ள நபர்கள் பூங்கா வழிகாட்டிகளாகப் பணிபுரிய வரவேற்கப்படுகிறார்கள். தேர்வு பெற்றவர்களுக்கு தேவையான பயிற்சிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு அண்ணா உயிரியல் பூங்காவில் வழிகாட்டிகளாகப் பணிபுரிய அங்கீகார அட்டைகள் வழங்கப்படும். இந்த வழிகாட்டிகள் விலங்குகள் பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியும் சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துக் கூறுவார்கள். பயணிகள் வழிகாட்டிகளுக்கு உரிய தொகையினை வழங்குவார்கள்.
 வழிகாட்டியாக பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுய விவரங்களுடன் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், சென்னை - 48 என்ற முகவரிக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP