Wednesday, September 15, 2010

வெளிநாட்டு வாய்ப்பு

தமிழக அரசின் கூடுதல் செயலரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான குத்சியாகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: 
தமிழக அரசின் நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்ய ஆள்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சவூதி அரேபியாவில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 55 வயதுக்கு உட்பட்ட நெப்ராலஜி பிரிவில் 2ஆண்டு அனுபவம் உள்ள கன்சல்டிங் ஸ்பெசலிஸ்ட், ரெசிடெண்ட் மருத்துவர்கள் மற்றும் பி.எஸ்.சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 40 வயதுக்குள்பட்ட பெண் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பெண் செவிலியர்கள் 2 ஆண்டு நெப்ராலஜி மற்றும் பயாலஜி பிரிவில் 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். சவூதி அரேபிய அமைச்சகத்தின் தேர்வுக் குழுவினரால் இந்த மாத இறுதியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 
தேர்ந்தெடுக்கப்படுபர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வேலைவாய்ப்பு அலுவலரால் வழங்கப்படும். இந்த பணிக்குச் செல்ல தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய டைப் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம்,பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட 10 போட்டோக்களுடன் சென்னை, அடையாறு டாக்டர் முத்துலெட்சுமி சாலையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அலுவலக நாள்களில் நேரில் வந்து பதிவு செய்யலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP