காத்திருப்போர் 70லட்சம்
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் 36 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. கடந்த 31.12.2009 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சம். இதில் பெண்கள் மட்டும் 28.43 லட்சம் பேர். இவர்களில் இதுவரை 84 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் விரிவுரையாளர் முதல் மருத்துவமனை ஊழியர் வரை 57 வகையான பணியிடங்கள் அடங்கும்.
வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருப்போரில் மருத்துவப் படிப்புகளில் (அலோபதி முதல் அக்குபஞ்சர் மருத்துவர் வரை) பட்டம் பெற்ற 21,459 பேரும், ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 1.20 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2.21 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1.45 லட்சம் பேரும், எம்.எட். பட்டம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 23 ஆயிரம் பேரும் அடங்குவர்.