வி.ஏ.ஓ. தேர்வு எப்போது?
தமிழ்நாடு முழுவதும் 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த (ஜூலை) மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வு நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் தேர்வு நடைபெறலாம், அது பற்றிய முடிவு இம்மாத இறுதியில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி.யை வந்தடைய ஆகஸ்டு 20 கடைசி நாள். அதன் பிறகு விண்ணப்பங்களை சரிபார்த்தல், பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.
வி.ஏ.ஓ பணிக்காக 13லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தபால் நிலையங்கள், டி.என்.பி.எஸ்.சி அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சடித்து வெளியிடவும் டி.என்.பி.எஸ்.சி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.