பொது அறிவு: நியமனம்
இந்தியாவின 17வது தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி (சஹாபுதீன் யாகூப் குரேஷி) ஜூலை 30 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் மூத்த தேர்தல் கமிஷனராக பணியாற்றி வந்த குரேஷி டெல்லியில் பிறந்தவர். 1971ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். வரலாற்றில் முதுகலைப் பட்டமும், தகவல் தொடர்பு மற்றும் சமூகவியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.
சுகாதார அமைச்சக சிறப்பு செயலாளர், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், நேரு யுவகேந்திரா டைரக்டர் ஜெனரல் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் நிறுவனத்தை நிறுவி அதன் இயக்குநராகவும் பணியாற்றியவர். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த முதல் தலைமை தேர்தல் கமிஷனர் என்ற பெருமையையும் தற்போது பெற்றிருக்கிறார் குரேஷி.