3 கோடி வேலைவாய்ப்பு
ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறை நல்ல வளர்ச்சி கண்டு வருவதாகவும், 2020ஆம் ஆண்டுவாக்கில் இந்த துறைகளில் 30மில்லியன் (3கோடி) வேலை வாய்ப்புகள் உருவாகும் என நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் தெரிவித்துள்ளார். நேரடியாக 10மில்லியன் பேருக்கும், மறைமுகமாக 20மில்லியன் பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 2001ஆம் ஆண்டில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறையில் (நேரடி ஊழியராக) 4.3 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றிய நிலையில் தற்போது (2010ல்) எண்ணிக்கை 23லட்சமாக உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது என்கிறார் சோம் மிட்டல்.