வேலைவாய்ப்பு முகாம்
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 24-07-2010 அன்று காலை 8.30- மாலை 4.30 மணி வரை நடக்கிறது.2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ஹெச்.சி.எல்., டெல், சுந்தரம் மோட்டார்ஸ், ஏசிடி (வால்வோ) போன்ற 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் பங்கேற்க வருபவர்கள் 10 பிரதி சுய விவரக் குறிப்புகள், 3 புகைப்படங்கள் மற்றும் கல்விச் சான்றின் அனைத்து நகல்களையும் எடுத்து வரவேண்டும் என கல்லூரி தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.