பி.டி.உஷாவுக்கு பதவி
ராஜீவ்காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளுக்கான தேர்வு கமிட்டி தலைவராக தடகள வீராங்கனை பி.டி.உஷா நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் இடம் பெற்றுள்ள பிற உறுப்பினர்கள்:
அபர்னா போபட் (இறகுப்பந்து), சோமையா (ஹாக்கி), நிஷா மில்லர் (நீச்சல்), லியாண்டர் பயஸ் (டென்னிஸ்), கர்ணம் மல்லேஸ்வரி (வலு தூக்குதல்), லிம்பாராம் (வில் வித்தை), ஆதிராஜ் சிங் (குதிரையேற்றம்), முகமது ஹபி (கால்பந்து), ஸ்ரீராம் (கபடி) ஆகிய வீரர், வீராங்கனைகள் மற்றும் பிரதீப் சிங், பரூவா, இஞ்சட்டி ஸ்ரீனிவாஸ், ராகுல் பட்நாகர், பிரவீர் கிருஷ்ணன், தீபிகா கோச்சல் ஆகிய அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருதினை தேர்வு செய்யும் கமிட்டித் தலைவராக முன்னாள் ஹாக்கி வீரர் அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.